கொரோனாவால் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வரும் 29-ஆம் தேதி கூட இருந்தது.

 

இந்த நிலையில்,கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வண்ணம் தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பின் அடிப்படையில் பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைப்பதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்குமாறு திமுகவினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply