மாஸ்டர் திரைப்பட விழாவில் தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற விஜய் ரசிகர்கள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் ரசிகர்கள் சிலர் தங்களை உள்ளே அனுமதிக்க கோரி நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டல் வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

 

அதில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி சீட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்ததால் அவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் ஹோட்டல் வெளியே காத்திருந்த நூற்றுக்கணக்கான விஜய் ரசிகர்கள் நிகழ்ச்சி தொடங்கிய சில மணி நேரத்திற்கு பின்பு நுழைவு வாசலில் நின்றிருந்த காவலர்கள் மற்றும் பிரவுசர்களை கீழே தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தார்கள்.

 

இருப்பினும் உட்புற நுழைவு வாயிலில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அந்த பகுதியிலேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Leave a Reply