உண்மையாக இருக்க வேண்டும் என்றால் ஊமையாக இருக்க வேண்டும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் வாழ்க்கை என்பது நதியைப் போன்றது என்றும், நம்மை சிலர் வணங்குவார்கள், சிலர் வரவேற்பார்கள், பிடிக்காதவர்கள் சிலர் கல் எறிவார்கள் என்றும் நமது கடமை அந்த நதியை போல் போய்க் கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறினார்.

 

உண்மையாக இருக்க வேண்டுமென்றால் சில நேரங்களில் ஊமையாக இருக்கவேண்டும் எனவும் தற்போதைய இந்த விஜயை விட இருபது வருடங்களுக்கு முன்பு ரெய்டு இல்லாமல் அமைதியாக வாழ்ந்த அந்த விஜய் தான் தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.