கிரிக்கெட் பயிற்சியை முடித்துக்கொண்ட தோனி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரசின் பரவலை தடுக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் பயிற்சியை முடித்துக் கொண்டுள்ளார். ஐபிஎல் ஐ முன்னிட்டு இந்த மாத தொடக்கம் முதலே சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.

 

தற்போது போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில்வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

 

அதில் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு கையொப்பமிட்டு கொடுக்கும் தோனி பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள் மற்றும் சிஎஸ்கே சேர்ந்தவர்களுடன் இணைந்து கைகுலுக்கினார்.


Leave a Reply