கொரானா அச்சுறுத்தல் காரணமாக சி‌ஏ‌ஏ போராட்டம் தற்காலிக வாபஸ்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சி‌ஏ‌ஏவிற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வந்த போராட்டங்கள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்லாமிய மற்றும் அரசியல் கட்சியின் கூட்டமைப்பினர் குழுவை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து போராட்டங்களையும் தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்தனர்.

 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் பிப்ரவரி 14ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply