கொரோனா அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 74 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொரொனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சார்க் நாடுகளின் தலைவர் மாநாடு காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

 

அழைப்பை ஏற்று இலங்கை ,வங்கதேசம், பூடான், மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அவரவர் நாட்டிலிருந்து காணொளி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி அதிக மக்கள் தொகை கொண்ட சார்க் நாடுகளில் கொரொனாவை தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வருமாறு அழைப்பு விடுத்தார்.

 

சார்க் நாடுகளில் 150 பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தயாராக இருப்போம் அச்சப்பட மாட்டோம் என்பதுதான் இந்த விஷயத்தில் இந்தியாவின் மந்திரமாக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

 

இந்தியாவிற்கு வருவோரை பரிசோதிப்பது முன்கூட்டியே தொடங்கி விட்டதாகவும் படிப்படியாக கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் அலி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மற்றும் இலங்கை மாலத்தீவு மட்டுமின்றி பாகிஸ்தான் பிரதிநிதியும் பங்கேற்று பேசினார்.


Leave a Reply