என்னைலாம் கொரொனா அண்டாது! பச்ச பட்டினி விரதம் இருங்க!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பச்ச பட்டினி விரதம் இருந்தால் கொரொனா தாக்காது என வீடியோ மூலம் நித்யானந்தா சீடர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் சற்றும் சளைக்காமல் தனது உபதேசங்களை பக்தர்ளுக்கு வழங்கி வருகின்றார்.

 

நித்யானந்தா ஈகுவடார் நாட்டின் அருகே கைலாசம் என்ற பெயரில் ஒரு தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்குத்தான் பிரதமராக இருப்பதாகவும் அவர் கூறி வருகின்றார். இந்த கைலாசாவில் குடியேற 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ளதாகவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நித்யானந்தா.

 

தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தாவை பிடிக்க சர்வதேச போலீசார் மூலம் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக எவ்வளவு நடந்தாலும் நாள்தோறும் யூடியூபில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை.

 

இந்தநிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட நித்யானந்தா பச்ச பட்டினி விரதம் இருந்தால் கொரொனா நோய் நம்மை அண்டாது என விளக்கம் அளித்துள்ளார். கொரொனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று கூறிய நித்தியானந்தா எதிர்காலத்திலும் எங்களை கரோனா வைரஸ் தாக்காது என கூறியுள்ளார், பரமசிவன், கால பைரவரும் இருக்கும் வரை எங்களை எதுவும் செய்ய முடியாது எனக் கூறிய அவர் அவர்கள் பாதுகாவலர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.