அறிவாளிகள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளனர்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கூறியிருந்த நிலையில் நமது அறிவாளிகள் அதற்கு மாறாக அரசுக்கு வருவாய் உயர்த்தியுள்ளனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் இந்திய நுகர்வோருக்கு சென்று சேர வேண்டும் என பிரதமரிடம் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தான் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அதற்கு மாறாக எரிபொருள் விலையை உயர்த்தப்பட்டுள்ளது எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வீடியோவையும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.


Leave a Reply