அரசுப் பணிகளில் சேர தமிழ்வழிக்கல்விக்கு முன்னுரிமை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் இன்றுதாக்கல் செய்யப்பட்டது. தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசு பணிகளில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதாவை பணியாளர் மற்றும் நிர்வாக துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

 

அதன்படி பட்டப்படிப்பு தகுதிக்கான பணிக்கு பட்டப்படிப்பு மட்டுமின்றி பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளில் தமிழில் படித்திருக்க வேண்டும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான பணிக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளில்தமிழ் வழியில் படித்திருந்தால் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான பணிக்கு பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல டிப்ளமோ தகுதிக்கான பணிக்கு பட்டயப்படிப்பு மட்டுமன்றி எஸ்எஸ்எல்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தமிழ் வழியில் படித்து இருத்தல் வேண்டும் என்றும் பட்ட மேற்படிப்பு கல்வி தகுதிக்கான பணிக்கு 10, 12 பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு ஆகியவை தமிழ் வழியில் பயின்று எழுதவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply