முதலமைச்சர் பழனிசாமி உடன் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் சந்திப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

 

பாரதிய ஜனதாவின் மாநில தலைவராக முருகன் நியமிக்கப்பட்ட பின் அவருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்திருந்தார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகன் அதிமுகவுடன் இணைந்து பணியாற்ற போவதாக கூறினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் கூறினார்.