கொரோனா வைரசால் மாஸ்டர் பட ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று படத்தின் அனைத்து போஸ்டர்களிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 9 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

 

இந்த நிலையில் கொரொனா பாதிப்பு காரணமாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் இந்த மாதம் 31ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல் தமிழகத்தின் அனைத்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மேலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

 

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் விஜய் படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பும், வசூலும் கிடைக்கும் என்பதால் அங்கும் திரையரங்குகள் திறக்கப்படும் வரை மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாது என்று தெரிகிறது.

 

மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதால் இந்தியாவின் கொரொனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகள் திறக்கப்படும் வரை படத்தின் ரிலீஸ் இருக்காது என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply