மோடி விளம்பரங்களுக்கு அதிக செலவு செய்கிறார்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிரதமர் மோடியின் விளம்பரங்களுக்கு நான்காயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை புரசைவாக்கம் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகளிர்தினம் கொண்டாடப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதனை எதிர்த்து போராடி ஒழித்திட வேண்டும் என்றும் மேலும் கச்சா எண்ணெய் விலை பேரன் 33 டாலராக குறைந்துள்ளது.

 

இருந்த போதிலும் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என குஷ்பு கேள்வி எழுப்பினார். மேலும் பிரதமர் மோடியின் விளம்பரங்களுக்கு அதிகளவில் பணம் செலவழிக்கப் படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


Leave a Reply