கஃபே காபி டே! நிறுவன நிதியில் ரூ 2000 கோடி மாயம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் தற்கொலையைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 2,000 கோடி ரூபாய் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டார் .

 

அதற்கு பிறகு நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்து கபே காபி டே இயக்குனர் குழுமம் சுமார் ஒரு மாதகால ஆய்வை மேற்கொண்டது. இதில் கிடைத்த முடிவுகள் ரகசியமாக வைக்கப்பட்டாலும் சில முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன.

நிறுவனத்தின் பங்கு நிதியிலிருந்து கோடிக்கணக்கான ரூபாயை தனிப்பட்டவர்களிடம் வாங்கிய கடனுக்காக சித்தார்த்தா கை மாற்றியதும் இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. சித்தார்த்தா படுகொலையை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் 90 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது உடன் கடந்த மாதம் அதன் பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.