கொரொனாவால் தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்த இளைஞர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா அறிகுறி இருப்பதாக கருதி மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர் அங்கிருந்தபடியே தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை பார்க்க நேர்ந்த சோகம் கேரளாவில் நடந்துள்ளது. கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த லினோ என்ற 30 வயது இளைஞர் கடந்த எட்டாம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார்.

 

கட்டிலிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக லினோ அவசரமாக தாயகம் திரும்பியிருந்த அச்சுறுத்தல் உள்ள சூழலில் விமான நிலையம் வந்து இறங்கினார். லேசான இருமல் இருந்ததால் தானாகவே மருத்துவ அதிகாரிகளை அணுகி அவர் பின்னர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்த சூழலில் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லினோ அவரின் தந்தை உடல் நலம் மிகவும் மோசமடைந்து கடந்த 9ம் தேதி மரணமடைந்தார். ஒரே மருத்துவமனையில் இருந்த போதிலும் கொரொனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால் தனது தந்தையின் உடலை நேரில் பார்க்க முடியாத துரதிஷ்டசாலி ஆனாலும் பிறகு மருத்துவமனையில் இருந்து தனது தந்தையின் உடல் ஆம்புலன்சில் செல்வதை அறையின் ஜன்னல் வழியாக பார்த்து கண்ணீர் வடித்தார் அந்த இளைஞர்.

அதன் பிறகு மொபைல் வீடியோ கால் மூலமாக தனது தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்து துடித்துப் போனார் அவர். இதனையடுத்து தனது நிலை குறித்து அவர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் விமானநிலையத்தில் தாமாகவே முன்வந்து மருத்துவ குழுவை அணுகி இருக்காவிட்டால் தனது தந்தையை கடைசியாக ஒரு முறையாவது பார்த்திருக்க முடியும் என்ற போதிலும்தான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என கூறியுள்ளார்.

 

கொரொனா தன்னை தாக்கியிருக்கும் வைரஸ் பலருக்கும் பரவி விடும் என்கிற காரணத்தால் தாமாகவே மருத்துவமனையில் சேர்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வெளிநாடுகளில் இருந்து வருவோர் தயங்காமல் மருத்துவ குழுவினரை அணுகி தங்களது உடல் நிலையை பரிசோதித்து கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

அருகில் இருந்து தந்தையை கவனித்துக் கொள்ளாமல் அருகில் இருந்த அவரது உடலை கூட பார்க்க முடியாமல் போனதுதான் நெஞ்சை உருக்கும் வேதனையான விஷயமாகும். ஆனால் அதன் பிறகுதான் இந்த விஷயத்தில் மிகப்பெரிய ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் கொரொனா பாதிப்பு இல்லை என்பதுதான் அந்தத் திருப்பம். கொரொனா இருக்கிறதா என இந்த ஒரே ஒரு சந்தேகம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத சோகத்தை இளைஞருக்கு ஏற்படுத்திவிட்டது.


Leave a Reply