வெறும் 10 ரூபாய்க்கு சிக்கன் 65! கொரொனா விழிப்புணர்வு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


கோழியின் மூலம் கொரொனா பரவவில்லை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிக்கன் 65, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. கோழிகள் மூலம் கொரொனா பரவுவதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவியதால் கறிக்கோழி விற்பனை கடந்த சில தினங்களாகவே கடும் சரிவை சந்தித்துள்ளது.

 

கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 எட்டியுள்ளது . பலி எண்ணிக்கையும் 2 – ஆக உயர்ந்துள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

 

தமிழகத்தில் கொரானா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. எனவே,கோழியின் மூலம் கொரொனா பரவவில்லை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிக்கன் 65, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.