கண்ணுக்கு தெரியாத சங்கிலி! குப்புற விழுந்த இளைஞர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


அயர்லாந்தில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டவர் சாலையில் கட்டப்பட்டிருந்த சங்கிலியில் தடுக்கி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். டன்னுன் என்ற இடத்தை சேர்ந்த ஜமிரே என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.

 

அப்போது பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையில் பெயிண்ட் அடிக்கப்பட்டு அதற்கான தடுப்பு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜமி அந்த தடுப்பை கவனிக்காமல் வந்தபோது அங்கு கட்டப்பட்டிருந்த சங்கிலியால் கால் இடரி தலைகுப்புற கீழே விழுந்தார்.

 

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply