காதல் திருமணம்! நெருக்கடியால்..அப்பாவுடன் செல்லும் இளம்பெண்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகளால் காதல் திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம்பெண் இளமதி தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த ஒரு சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண் மற்றொரு வேறு சமூகத்தை சேர்ந்த செல்வன் என்ற இளைஞனுக்கும் மேட்டூரை அடுத்த கண்டியூரில் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திருமணம் செய்து வைத்தனர்.

 

இந்த நிலையில் 40 பேருடன் ஊருக்கு வந்த பெண்ணின் தந்தை ஜெகநாதன் தனது மகளை அங்கிருந்து அழைத்து சென்றார். அதேசமயம் காதல் திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகியை கடத்தியதாக அந்தப் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

இதற்கிடையே தந்தையால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளமதி மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார் .அவர் பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக இளமதியுடன் காவல் நிலையத்திற்கு வந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply