2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரிய சோமுரை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் முத்துசாமி என்பவரும் உறவினர் பழனிச்சாமியும் காஞ்சிகோவில் செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதையில் வீதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் வலது புறமாக திரும்பிய போது அவர்களின் மோட்டார் சைக்கிளின் மீது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. இதில் 3 பேரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் முத்துசாமி பரிதாபமாக உயிர் இழந்தார். விதிகளை மீறி ஒரு வழிப்பாதையில் வந்ததே விபத்து ஏற்பட்டு போக்குவரத்து ஊழியர் மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




