சாலையில் விழுந்து வெடித்த ஆக்ஸிஜன் சிலிண்டர்! இளைஞர் உயிரிழப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவில் சாலையில் விழுந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிச்சுவான் மாகாணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

 

அப்போது வளைவில் அந்த வாகனம் திரும்பிய போது அதன் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கீழே விழுந்தன. இதில் முனைப்பகுதி உடைந்ததால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஒரு சிலிண்டர் அதிவேகத்தில் சாலையில் எதிர்ப்புறம் சென்றது. அதே நேரத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது சிலிண்டர் மோதி வெடித்து சிதறியது.

 

இதில் நிலைதடுமாறிய வாகன ஓட்டி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த விபத்து அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.


Leave a Reply