பறவைக்காய்ச்சல் எதிரொலி,.!கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு !!!
கேரளாவில் ஏற்கனவே கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பறவைக்காய்ச்சலும் பரவி கேரள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் கோவையின் தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் கால்நடை பராமரிப்புத்துறையினரால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக கோவையின் தமிழக-கேரளப்பகுதிகளான வாளையார்,வேலந்தாவளம்,ஆனைகட்டி,முள்ளி,மேல்பாவி ( பட்டிச்சாலை ) உட்பட 5 சோதனைச்சாவடிகள் மற்றும் பொள்ளாச்சியில் 7 சோதனைச்சாவடிகள் என 12 பகுதிகளில் கோவை மண்டல இணை இயக்குனர் மருத்துவர்.பெருமாள் சாமி தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் 12 சோதனைச்சாவடிகளில் பறவைக்காய்ச்சலை தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதோடு, கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு சோடியம் பை கார்ப்பனேட் மற்றும் பொட்டாசியம் பெர்மாங்கனேட் அடங்கிய கரைசல் மருந்தினை தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி வேலந்தாவளம் சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருத்துவர் மணிமாறன் தலைமையிலான குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளித்து அனுமதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




