--- --:--:-- --

மாஸ்டர் படத்தின் 2 வது பாடலாக வாத்தி கமிங்க் வெளியீடு!

6

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ் திரைப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலாக வாத்தி கம்மிங்க் மாலை 5 மணி அளவில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.

 

பாடல் வெளியான சில மணி நேரத்தில் யூடியூப்பில் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை மாஸ்டர் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்படுகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon