குடிபோதையில் ஓட்டிவந்த கார் விபத்து! தூக்கி வீசப்பட்ட மாணவிகள்!
கேரளாவில் குடிபோதையில் ஓட்டிவந்த கார் மோதி சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆலப்புழா பகுதியை சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகியோர் டாடா இண்டிகா காரில் சென்றுள்ளனர்.
இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் சாலையில் நடந்து சென்ற நான்கு பள்ளி மாணவிகள் மற்றும் சைக்கிளில் வந்த ஒரு மாணவி மீது இவர்களது கார் அடுத்தடுத்து மோதியது. இதில் மாணவிகள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாணவிகள் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது. இதில் காரை ஓட்டி வந்த இருவரும் படுகாயமடைந்தனர். கார் மோதியதில் 2 மாணவிகளுக்கு கால்கள் உடைந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




