போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தல்!!
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட ,நாள் கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய போராடிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகளை திரும்பெறுவதற்கான அறிவிப்பு நடப்பு கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் எனதமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா .அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு ரூ.34,818 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதிக்கிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வில் அனைத்துத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுகிறது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருதற்கான அறிவிப்பு மற்றும் பணிக் கொடை வழங்குவதற்கான அறிவிப்பும் இடம்பெறும் என்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்ப்பாத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி ஒதுக்கீடு செய்து அதில் தனியார் பள்ளிகளில் 25% விழுக்காடு ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ, 644 கோடி ஒதுக்கி இருப்பது தனியார் பள்ளிகளை இன்னும் ஊக்கப்படுத்தி அரசு பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக மூட வழிவகை செய்வதாகவே எண்ணத் தோன்றுகிறது.
தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க 25% விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யும் நிதியை அரசு பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கீடு செய்தும் மாணவர்களை நல்ல முறையில் கல்விகற்க ஆசிரியர்களை முழு சுதந்திரம் அளித்து செயல்பட வைத்தாலே அரசுப் பள்ளிகளில் அனைத்து தரப்பு பெற்றோர்களும் தன் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை காட்டிலும் அரசுப் பள்ளிகளில் தான் சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதாரா கோரிக்கையான பழைய ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கவும் மற்றும் சென்ற ஆண்டு போராட்டக்க காலத்தில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வழக்கு மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
அதே போன்று பகுதிநேர சிறப்பாசியர்களுக்கு சிறப்பு தனித் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்து தமிழக முதல்வர் இந்த தொடரிலயே நிறைவேற்றி எதிர்கால வாழ்க்கையில் ஒளியேற்றுவார் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றோம், எங்கள் நியாயமான கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி தர தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என சா.அருணன் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




