சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள புதிய ரக அரசி ‘தெலங்கானா சோனா

அரிசி சாதம் அதிகம் எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்று உள்ளது. கம்பு, கேழ்வரகு போன்ற சிறு வகை தானியங்களை விடவும் மாவுச்சத்து குறைவான தெலங்கானா சோனா என்ற அரிசி ரகத்தை ஹைதராபாத் தெலுங்கானா வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சியாளர் ஜெயசங்கர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

 

இந்த அரிசியில் 51 சதவீதம் மட்டுமே மாவுச்சத்து இருப்பதுடன், இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும் என்று புகழ்பெற்ற அமெரிக்க ஜர்னல் ஆப் பூட் ந்யூட்ரிஷன் தெரிவித்துள்ளது.

 

டைப் 2 டயாபடீஸ் எனப்படும் பொதுவான சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு இந்த அரிசி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 120 இல் இருந்து 130 நாட்களில் விளைச்சல் தரும் ரகமாக இருப்பதால் விவசாயிகளுக்கும் இந்த அரிசி ரகம் பயனுள்ளதாக இருக்கும்.


Leave a Reply