கொரோனாவால் 2 வது இடத்திற்கு தள்ளப்பட்ட முகேஷ் அம்பானி!
கொரொனா பாதிப்பால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் சரிந்து அவர் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரொனா வைரஸ் தாக்குதல் உலக அளவில் பல நாடுகளின் பொருளாதார மந்த நிலைக்கு தள்ளியுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதனால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளும் கடுமையான சரிவை கண்டன. இதனால் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்தது.
இதனால் ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திற்கு சென்றார். 2018 ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்த அலிபாபாவின் நிறுவனர் ஜாக்மா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




