நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் விஜயலட்சுமி. ஃபிரண்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தலைமை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னை குறித்து அவதூறாக பேசுபவர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.