செங்கல் சூளையில் ஏற்பட்ட மினி டொர்னாடோ! மக்கள் அலறல்!

உடுமலை அருகே பலத்த காற்று வீசிய போது தனியார் செங்கல் சூளையில் ஏற்பட்ட சூழல் காற்று மினி டொர்னாடோ போல காட்சியளித்தது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடக்கு குளம் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.

 

இந்த நிலையில் நேற்று மாலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை சாரல் பெய்தது. மழை வருவதற்கு முன்பாக உடுமலை மடக்கு குளம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று பலமாக வீசியது. உடுமலை அருகே சீலநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் செங்கல் சூளையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது பலத்த காற்று வீசியபோது சுழல்காற்று உருவாகி வேகமாக சென்று மேகத்திற்கும் தரைக்கும் வருவதை கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அந்த மினி டொர்னாடோவை அங்கிருந்து தொழிலாளி ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.


Leave a Reply