--- --:--:-- --

பயோமெட்ரிக் வருகைப் பதிவு தற்காலிக ரத்து அறிவிப்பு..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வரவேற்பு!!

ebf20093-7cfd-4dad-897c-b422c25a1e1b

கொரோனா வைரஸ் காரணமாக அலுவலகங்கள் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு மத்திய அரசு விலக்களித்தது போன்று மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு தற்காலிகமாக விலக்கு அளித்ததற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

 

இது குறித்து இந்த கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் முறைக்கு விலக்கு அளித்துள்ளது. ஊழியர்கள் ஆசிரியர்கள் வருகை பதிவேடுகளில் மட்டும் தங்களது வருகையை பதிவு செய்ய மத்திய அரசின் கீழ் உள்ள அனைத்துத் துறை அலுவலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ், விரல்கள் மூலம் அதிகம் பரவும் என்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது, காரணம் பயோமெட்ரிக் கருவியில் அடுத்தடுத்து தொடர்ந்து கைவிரல்கள் பதிவிடுவதால் வைரஸ் பரவக்கூடும்.

இதனால் மாணவர்களுக்கும் பாதிப்படைய வாய்ப்ப்பு என்பதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைத்தோம்.

 

அதனையேற்று இன்று தமிழக அரசு பயோமெட்ரிக் கருவியில் தொடர்ந்து கை விரல்கள் பதிவிடுவதால் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதை அறிந்து துரித நடவடிக்கையாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்ம் அலுக பணியாளர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு விலக்கு அளித்த தமிழக அரசிற்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அதன் நிறுவனத் தலைவர் சா.அருணன் நிறுவனத் தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon