புகார் அளிக்க வந்த இளைஞரை கொத்தாக பிடித்து தாக்கிய பெண் காவலர்
கோவையில் புகார் அளிக்க வந்த இளைஞரை பெண் தலைமை காவலர் தாக்கி இழுத்துச் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பதோடு இந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு உள்ளது.
கோவை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர் கிருஷ்ணவேணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவரிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களிலும் இது குறித்து செய்திகள் பரவின. அண்மையில் புகார் அளிக்க வந்த ஒரு நபரை கிருஷ்ணவேணி தாக்கியதோடு சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டு இழுத்து சென்றார்.
இந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின. பாதிக்கப்பட்டவர்கள் கோவை எஸ்பியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து தலைமை காவலர் கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளேட்டில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. புகார் அளிக்க வருவோரிடம் லஞ்சம் கேட்டது , தாக்குதல் நடத்தியது குறித்து இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கோவை எஸ்பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




