கழிவுநீரில் காய்கறிகளை கழுவிய வியாபாரி! அவனை பிடித்த பொதுமக்கள்!

கழிவுநீர் தொட்டியில் காய்கறிகளை கழுவி தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் சுத்தப்படுத்தி எடுத்துச்சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ எப்போது? எங்கு எடுக்கப்பட்டது? என்பது தெரியவில்லை.

 

வீடியோவில் வியாபாரி ஒருவர் தன்னிடமுள்ள தக்காளி, பீன்ஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை கழிவுநீர் தொட்டியில் கழுவி சுத்தப்படுத்தி பிறகு தள்ளுவண்டியில் அடுக்கி வைத்து எடுத்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. வண்டியில் வரும் காய்கறிகள் புத்தம் புதியது, விலை குறைவானது என்று மக்கள் நம்பி வாங்குவது வழக்கம் ஆகும் .

 

இந்நிலையில் காய்கறிகளை கழிவுநீர் தொட்டியில் வியாபாரி சுத்தம் செய்வதை கண்ட மக்கள் அவரை விரட்டி சென்று பிடித்த காய்கறிகளை குப்பையில் போட்டனர்.


Leave a Reply