புதுச்சேரியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆரோக்கிய உணவு பழக்கத்தை வலியுறுத்தும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு வாழை இலையில் மதிய உணவு பரிமாறப்பட்டு வருகிறது.
வெள்ளியனுரை அடுத்த கீழ் சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 5 மாதங்களாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதன்மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம் பேணப்படுவதோடு நீரை சேமிப்பும் சாத்திய படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பள்ளி ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மாணவர்களின் பெற்றோர் அதற்கான பொருளாதார உதவியும் செய்து வருகின்றனர்.