5பந்துகளையும் 5சிக்சர்களுக்கு விளாசிய தோனியின் வீடியோ! வைரல்!

பயிற்சியின்போது ஐந்து பந்துகளையும் தவறவிடாமல் ஐந்து சித்தர்களுக்கு விளாசிய முன்னாள் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

 

ஐபிஎல் போட்டிகள் வரும் 29ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான தீவிர பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி 5 பந்துகளையும் தவறவிடாமல் ஐந்து சிக்சர்கள் விளாசி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

இந்த வீடியோவை ஐபிஎல் போட்டி அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு சேனல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இராணுவம், விவசாயம் என இருந்த தோனியின் இந்த அதிரடி ஆட்டத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Leave a Reply