உலகம் முழுவதும் கொரோனா உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில் கொரோனா என்ற பெயர்கொண்ட பீர் விற்பனை பெருமளவு சரிந்ததாக கூறப்படுகிறது. மெக்சிகோவை தலைமையிடமாகக் கொண்டு விற்பனை செய்யப்படும் ஒரு உணவு வகைகளில் கொரோனா பிரபலமான ஒன்று.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கிருமியால் நாளுக்குநாள் உயிரிழப்பு அதிகரித்து வருவதால் விற்பனையும் கடுமையாக சரிந்தது மேலும் பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. பீர் விற்பனை 14 விழுக்காடு வரை குறைந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கொரோனாவிற்க்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கொரோனா மதுபான நிறுவனத்தின் அறிவித்துள்ளதை தொடர்ந்து பீர் விற்பனை மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.