பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் ஜி.மோகன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி’. ரிஷி ரிச்சார்டு, ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் ஜூபின் இசையில். ஒளிப்பதிவு மனோஜ் நாராயணன், எடிட்டிங் தேவராஜ் ஆகியோர் செய்ய நாடகக் காதல்களை தோலுரிக்கும் திரைப்படமாக கடந்த 3 ந் தேதி தமிழகமெங்கும் ரிலீசானது.
இப்படத்தை பார்த்த வி.ஐ.பிக்கள் பலரும் வெகுவாக பாராட்டினார்கள். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவனர் இன்ஜினியர் ஈஸ்வரன் ஒருபடிமேலேபோய் கொங்கு சொந்தங்கள் கண்டிப்பாக இப்படத்தை பார்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். திருப்பூரில் இப்படம் புது பஸ்நிலையம் அருகே உள்ள சக்தி தியேட்டரில் ரிலீசாகி ஓடிவருகிறது.
இந்தநிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் இன்று மாலை 6 மணி காட்சி கொங்கு சொந்தங்களுக்காக பிரத்யேக காட்சியாக திரையிடப்பட்டது. இதற்காக மாநகர பகுதியில் இருந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து இப்படத்தை பார்த்து ரசித்தனர்.
மேலும் இக்காட்சியை மக்களுடன் மக்களாக பார்ப்பதற்காக இப்படத்தின் உதவி டைரக்டர் சிவாவும் வந்து இருந்தார். அவரை தியேட்டர் உரிமையாளர் இளங்கோ சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ரோபோ ரவிசந்திரன், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மாடிகோவில் செல்வகுமார்,மண்டல செயலாளர் வேலுச்சாமி, மண்டல இளைஞரணி செயலாளர் செல்வகுமார், மாநகர மகளிரணி செயலாளர்கள் கோமதி, பழனியம்மாள், மண்டல மகளிரணி லட்சுமி, கோமதி, கொங்கு பண்பாட்டு மையம் எஸ் ஆர்.குமார், கிழக்கு மண்டல தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் லோகநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக குடும்பத்துடன் வந்து திரௌபதி படத்தை பார்த்தனர்.
திரௌபதி படத்தின் உதவி டைரக்டர் சிவா நிருபர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது. எனது சொந்த ஊர் வெள்ளகோவில். நான் திரைப்படக்கல்லூரியில் டைரக்டர் கோர்ஸ் ஒரு வருடம் படித்து முடித்துள்ளேன். பின்னர் இரண்டு வருடமாக கஸ்தூரி ராஜா போன்ற டைரக்டர்களிடம் பணியாற்றியுள்ளேன். குறைந்த பட்ஜெட் படமான இந்த படத்தை 2 வருடங்களாக சுமார் 60 லட்சத்தில் தயாரித்தோம். எங்கள் பட குழுவினரின் கூட்டு முயற்சியால் இப்படம் வெற்றி நடை போட்டுவருகிறது சந்தோஷமாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக திரௌபதி 2 படம் தயாரிக்கும் எண்ணம் தற்போது இல்லை.என்றார்,