கர்நாடகாவில் கார் விபத்தில் 13 பேர் பலி..! உயிரிழந்தவர்களில்10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்!!

கர்நாடகாவில் இரு கார்கள் அடுத்தடுத்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து தர்மசாலாவுக்கு தரிசனம் செய்து விட்டு திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சிக்கனபள்ளியைச் சேர்ந்த 12 பேர் டவேரா காரில் கர்நாடக மாநிலத்திலுள்ள மசாலாவுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தரிசனம் முடித்து இன்று அதிகாலை காரில் திரும்புகையில், தும்கூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரில் மோதி எதிர்ப்புற சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

 

அப்போது எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோதியது. இதனால் இரு கார்களும் சின்னாபின்னமாகின. இந்த விபத்தில் இரு கார்களிலும் சென்ற 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டுள்ளனர்.

 

இந்த விபத்தில் ஓசூர் சிக்கன பள்ளியிலிருந்து சென்ற மஞ்சுநாதா என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு காரில் வந்தவர்கள் பெங்களுரைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் பெங்களுருவில் இருந்து தர்மசாலாவில் தரிசனத்திற்காக சென்ற போது கார் விபத்துக்குள்ளானது. இந்த காரில் பயணித்தவர்களில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply