காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தை அறுத்த இளைஞர்!
சென்னையில் காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தை அறுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமைந்தகரை பகுதியை சேர்ந்த நித்யானந்தன் என்பவர் தனது வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்த எட்டாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் நித்தியானந்தன் தனது காதலை கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த நித்தியானந்தன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவி தன் கழுத்தை அறுத்து உள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தப்பியோடிய நித்யானந்தனை தேடி வந்த காவல்துறையினர் அவரது நண்பர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூருக்கு நித்யானந்தன் இருந்தது தெரியவந்தது. அங்கு சென்று தனிப்படையினர் நித்யானந்தா கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




