--- --:--:-- --

இரவில் வாட்ஸ் அப்பில் இருப்பவர்களுக்கு வசதியாக டார்க் மோட் வசதி அறிமுகம்!

3

உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் தனது பயனர்களுக்காக டார்க் மோட் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதும் அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டார்க் மோட் வசதியின் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேட்டரி விரயமாவது தடுக்கப்படும். ஸ்மார்ட்போன்களில் படிப்பதற்கு தெளிவாக தெரிய செய்யும் முயற்சியிலேயே டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் டார்க் மோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான குறிப்புகளை தனித்துக் காட்ட தனித்த நிறங்களும் டார்க் மோடில் கொடுக்கப்பட்டுள்ளன.

 

குறைந்த ஒளி நிலவும் சூழலிலும் இரவு நேரங்களிலும் டார்க் மோட் வசதிகளை பயன்படுத்தினால் கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதற்காகவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐஓஎஸ் 13 மாடல் போன் வைத்திருப்பவர்கள் டார்க் மோட் வசதியை பெற வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்து செட்டிங்ஸில் டிஸ்பிளே அண்ட் பிரைட்னஸ் என்று தெரிவில் என்பதை டார்க் மோட் என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும்.

 

ஆண்ட்ராய்டு 9 அல்லது அதற்குக் கீழான இயங்கு தளங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை வைத்திருப்போர் வாட்ஸ்அப் செட்டிங்கிற்குள் சென்று அதில் தெரிவில் இருக்கும் டார்க் மோட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon