தூங்கிய உபேர் டிரைவர்… காரை ஓட்டிய பெண் பயணி..!
மகாராஷ்டிராவில் உபேர் காரில் பயணித்த பெண் பயணி ஒருவர் டிரைவர் தூங்கி விட்டதால் தானே காரை ஓட்டி வீடு வந்து சேர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புனேவில் இருந்து அந்தேரி குபேர் காரை கடந்த மாதம் ஒன்றாம் தேதி தேஜஸ்வினி திவ்யா நாயக் என்பவர் முன் பதிவு செய்துள்ளார்.
இதன்படி அவர் பயணித்த போது டிரைவர் தூங்கி விழுந்த நிலையில் செல்போனில் பேசியபடியே காரையும் இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தூக்கக்கலக்கத்தில் ஒரு கார் மீதும் டிவைடர் மீதும் அவர் உரசி உள்ளார். இதை தேஜஸ்ரீ கண்டிக்கவே செல்போனை அணைத்து விட்டு காரை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து காரை தேஜஸ்வினி தானே வீட்டிற்கு ஓட்டி வந்த டிரைவர் தூங்கியதும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள உபேர் நிறுவனம் சம்பந்தப்பட்ட டிரைவரை சஸ்பெண்ட் செய்து விட்டதாக தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




