ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் ரத்து ?
வட இந்தியாவில் நடக்கவிருந்த ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரொனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைபெற்றது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தா, புனே உள்ளிட்ட வட மாநில நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரொனா வைரஸ் அச்சம் காரணமாக அந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அதற்கு பதிலாக ராமோஜிராவ் திரைப்பட நகரில் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




