--- --:--:-- --

பைக்கில் இருந்து தவறிவிழுந்த பெண் மீது லாரி ஏறிய சி‌சி‌டி‌வி காட்சி!

16

சென்னை அம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் மீது லாரி ஏறியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன . அத்திப்பட்டு ஐசிஎப் காலனி செல்வி அம்மன் நகரைச் சேர்ந்த 60 வயதான சேட்டு தனது மனைவி சகுந்தலாவுடன் மோட்டார் சைக்கிளில் அதற்கு நேற்றிரவு சென்றார்.

 

அப்போது திடீரென குறுக்கே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை கண்டதும் சேட்டும் பின்னிருக்கையில் இருந்த சகுந்தலாவும் நிலை தடுமாறி சாலையில் விழுந்த நேரத்தில் பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் சகுந்தலா மீது ஏறி இறங்கியது.

 

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி அடிப்படையாகக்கொண்டு போக்குவரத்து புலனாய்வு போலீசார் லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon