--- --:--:-- --

மலேசியாவில் பூட்டிய அறையில் இந்தியர்களுக்கு சித்ரவதை!

7

மலேசியாவில் முடிதிருத்தும் பணிக்கு சென்ற கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு மாத ஊதியம் வழங்காமல் அறையில் பூட்டி வைத்த சலூன் நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக அவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த ராதா சத்யா என்பவர் மலேசியாவில் பல்வேறு வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

 

அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு முடிதிருத்தும் பணி செய்வதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஹரிதாஸ் உள்ளிட்ட 2 பேர் சென்றுள்ளனர். இதற்காக மாதம் முப்பதாயிரம் ரூபாய் அவருக்கு ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதன் பின் கடந்த 6 மாதங்களாக ஊதியம் ஏதும் வழங்காமல் ஒரு அறைக்குள் பூட்டி வைத்து அந்த நிறுவனத்தினர் சித்திரவதை செய்வதாக வாட்ஸ்அப் மூலம் மூன்று பேரும் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து மலேசியாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர கோரி அவரது உறவினர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon