தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் தற்கொலைக்கு முயன்ற மாணவன்
தேர்வு கட்டணம் கட்ட இயலாமல் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு சென்னை காவல் ஆய்வாளர் ஒருவர் பணம் கொடுத்து உதவி கரம் நீட்டி உள்ளார். நெற்குன்றத்தில் வசித்துவரும் சரவணன் என்ற கல்லூரி மாணவன் தேர்வு கட்டணம் செலுத்த முடியாததால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
காவல்துறையினர் அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன் தேர்வு கட்டணம் செலுத்த நான்காயிரம் ரூபாய் வழங்கி உதவியுள்ளனர். இதற்காக ஆய்வாளர் மாதேஸ்வரனை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் பாராட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




