தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேடும் குழுவின் தலைவராக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமித்ததற்காக தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜெஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டுகொள்ளாமல் இருந்தவருக்கு இந்த பதவியை அளித்திருப்பது மோசமான முன்னுதாரணங்களில் ஒன்று என ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
துணைவேந்தர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவதாக கூறி தமிழக உயர் கல்வித் துறையிலும், காவியமயக் கொள்கையை கைவிடுவதாக ஸ்டாலின் கூறுகிறார் இதற்கு ஆளுநரே அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவிற்கு தமிழகத்தை சிறந்த தலைசிறந்த கல்வியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




