ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் டிக் டாக்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்தபடி நாம்தமிழர் கட்சியின் இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள டிக்டாக்வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்று உள்ளார். ராஜீவ்காந்தி நினைவு தூண் அருகில் நின்று அவர் எடுத்த டிக்டாக்வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த டிக்டாக்வீடியோ பகிரப்பட்டு வரும் நிலையில், நாம் தமிழர் நிர்வாகி துரைமுருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது .இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply