--- --:--:-- --

அரசி விலை ரூ.30 வரை உயர்வு..!

1

கடந்த 50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்நது உள்ள நிலையில் அதிக விலை கொடுத்து அரசி வாங்கும் பொது மக்களுக்கு தரமான அரிசி கொடுக்க முடியவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவச அரிசி கொடுக்கப்பட்டாலும், பெரும்பாலானோர் கர்நாடக பொன்னி அரிசி வகைகளை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.

 

இத்தகைய சூழலில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சூழலில் கடந்த 50 நாட்களில் மூன்றாவது முறையாக அரிசியின் விலை உயர்ந்துள்ளது.

 

கடந்த 50 நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ 55 ரூபாய் விற்கப்பட்ட கர்நாடக பொன்னி 30 ரூபாய் விலை ஏற்றம் செய்யப்பட்டு, 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசி 600 ரூபாய் வரை விலையேற்றம் கண்டுள்ளது. இட்லி அரிசிக்காக பயன்படுத்தப்படும் அரிசிகள் 35 ரூபாயிலிருந்து தற்பொழுது மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு 50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

மேலும் நாட்டுப் பொன்னி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் விலை உயர்வு செய்யப்பட்டு 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய ஐஆர்20 அரிசி 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது 60 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்துவிட்டதால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளதாக வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

இதன் காரணமாக ஒரு வாரத்திற்கு மூன்று முறை அரிசி லோடு வந்த நிலையில் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை அரிசி லோடு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளது. அதே நேரத்தில் விலை அதிகரித்தாலும் கூட தரமான அரிசி மக்களுக்கு கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைவு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலையாக உள்ளது. மேலும் அரிசி பதுக்கலில் யாரும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon