தூக்கிலிருந்து தப்பிக்க நிர்பயா குற்றவாளிகளுக்கு உள்ள வாய்ப்பு!
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் வினய் சர்மா, அக்ஷய் தாகுர், முகேஷ், பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க ஒருவருக்கு 4 என மொத்தம் 16 வாய்ப்புகள் இருந்தன. அதில் தற்போது மொத்தமாக மூன்று வாய்ப்பு மட்டுமே மீதம் உள்ளன.
முதலில் குற்றவாளி வினய் சர்மாவை எடுத்துக்கொண்டால், அவரது தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு, மறுசீராய்வு மனு ஆகியவை நிராகரிக்கப்பட்டு விட்டன. அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது. குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது தொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனால் அவருக்கு இருந்த நான்கு வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.
அதைபோல் குற்றவாளி முகேஷ் சிங்கின் சீராய்வு மனு, மறுசீராய்வு மனு, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு ஆகியவை நிராகரிக்கப்பட்டு விட்டன. அதைத்தொடர்ந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனால் முகேஷ் சிங்கிற்க்கும் இருந்த அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டன.
குற்றவாளி அக்ஷய் தாகுருக்கு தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு, மறுசீராய்வு, மனு குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட கருணை மனு ஆகியவையும் நிராகரிக்கப்பட்டு விட்டன. குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் ஒரு வாய்ப்பு மட்டுமே அக்ஷய் தாகூருக்கு உள்ளது.
குற்றவாளி பவன் குப்தாவுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு மற்றும் மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கும் வாய்ப்பு கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அணுகும் வாய்ப்பு ஆகியவை பவன் குப்தாவுக்கு மீதம் உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




