14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் போக்சோவில் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, ஒருவரின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதையடுத்து அதிக சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை ஆட்டோவில் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு அவர் கடத்தி சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பர்கள் இருவரை வரவழைத்து பின்னர் மூன்று பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மகளை காணாததால் பெற்றோர் அளித்த புகாரின் பாலவாக்கத்தில் சிறுமியை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதன்படி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நீலாங்கரை சேர்ந்த வினோத் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.


Leave a Reply