கன்னியாகுமரி கடல் சீற்றம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை, அதிகாலை 2.30 மணி முதல், செப்டம்பர் 28-ஆம் தேதி அதிகாலை 2.30 மணி வரை, 1.3 முதல் 1.6 மீட்டர் உயரம் கொண்ட கடல் அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறிய படகுகளை இயக்க வேண்டாம் என்றும், கடற்கரை மற்றும் கடற்கரையோர நீரில் எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும் மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




