சிங்கப்பூருக்கு விமானத்தில் டிராவல் ஆகும் மதுரை ஜிகிர்தண்டா

மதுரையின் புகழ்பெற்ற ஜிகிர்தண்டா விமானம் மூலம் சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகிறது. தூங்கா நகரமான மதுரை பொதுவாகவே உணவு பதார்த்தங்களுக்கு பெயர் பெற்றது.அதில் ஜிகிர்தண்டாவுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை சுவைக்காமல் செல்வதில்லை.

 

சிங்கப்பூர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ள ஜிகர்தண்டா தற்பொழுது அந்த நாட்டுக்கு ஏற்றுமதி ஆக உள்ளது. விமானம் மூலம் நேற்றிரவு ஏற்றுமதி செய்யப்பட்ட ஜிகிர் தண்டா இன்று முதல் சிங்கப்பூரில் விற்பனையாகிறது.


Leave a Reply