--- --:--:-- --

ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை பறித்துக்கொண்டு தந்தையைக் கவனிக்காமல் விட்ட மகன்கள்

2

தந்தையிடம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பெற்றுக்கொண்டு கவனிக்காமல் விட்ட மகன்களுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி அழகிய நகரை சேர்ந்த 77 வயது முதியவர் சுடலைமணி.

 

தள்ளாத வயதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளதாகவும், அவர்கள் தனது ஒன்றரை கோடி ரூபாய் சொத்துக்களை பிரித்துக் கொண்டு தன்னை ஆதரவின்றி கைவிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து விசாரணை செய்த நெல்லை சார் ஆட்சியர் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்காக 4 மகன்களும், மகளும் இணைந்து தந்தை சுடலை மணிக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டனர். இப்பணத்தை வழங்க தவறினால் அனைவருக்கும் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon